
தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இன்று இரண்டாம் தவணைக்கு செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இன்று மேலவை தலைவர் அவாங் பீமி அவாங் அலி பாஷா முன்னிலையில் நடந்த இந்த வைபவத்தில் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்வாதார துணையமைச்சர் ஃபுஸியா சாலேவும் இரண்டாம் தவணை காலத்திற்கு செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
பிகேஆர் கட்சியை சேர்ந்த இவ்விரு துணையமைச்சர்களும் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு ஏதுவாக இந்த நியமனம் அமைந்துள்ளது.
கடந்த 10 டிசம்பர் 2022-ல் முதல் தவணையாக இவ்விருவரும் செனட்டராக நியமனம் பெற்றனர்.
இவ்விருவரும் நியமனத்திற்கு வாழ்த்து கூறிய மேலவை தலைவர் அவாங் பீமி, இவர்களின் சிறப்பான பணி தொடர வேண்டும் என குறிப்பிட்டார்.
கூட்டரசு சட்டத்தின் 45(1)(b),45(3), மற்றும் 45(3A) விதிமுறைக்கு ஏற்ப மற்றுமை தங்கிய பேரரசர் இந்த நியமனத்தை செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


