
தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுடைமை திட்டத்திற்கு நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என மாநில சிரம்பான் ஜொயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் வலியுறுத்தினார்.
இம்மாநில தோட்டத் தொழில் துறையின் முதுகெலும்பாக விளங்கி வரும் இந்த தொழிலாளர்கள் வீடமைப்பு பிரச்சனையை இன்னும் எதிர்நோக்கி வருவதாக நேற்று நடந்த மாநில சட்டமன்ற கூட்டத்தில் அவர்
வலியுறுத்தினார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள தோட்டத் தொழிலாளர் வீடு அமைப்பு திட்டத்திற்கு அப்போதைய மத்திய அரசாங்கம் வெ 50 மில்லியன் ஒதுக்கீடு செய்திருந்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் அந்தத் திட்டம் முழுமை பெறவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் இதன் முன்னோடி திட்டம் அப்போதைய மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் முயற்சியில் பேராக் சுங்கை சிப்புட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் மத்திய அரசாங்கத்தின் மாற்றத்தின் காரணமாக அப்போது திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர்.
இருப்பினும் இம்மாநிலத்தில் தொழில் முனைவோர், மனித வளம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் ஆட்சி குழு உறுப்பினராக இருந்து வரும் வீரப்பன் சுப்பிரமணியம் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இம்மாநிலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் இருநோக்கும் பிரச்சினைகளை மாநில மந்திரி பெசாரின் கவனத்திற்கு இவர் தான் கொண்டு செல்ல வேண்டும் அவர் நினைவுறுத்தினார்.
இம்மாநிலத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு தோட்டத் தொழிலாளர்கள் முதுகெலும்பாக விளங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் விவேகமாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


