Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நம்பிக்கை ஊடகத்தின் நட்சத்திர விருதளிப்பு விழாவில் LOOKS Salon நிர்வாகி மகா கணேஷ் விருது பெற்றார்!

நம்பிக்கை இணைய ஊடகத்தின் நான்காவது ஆண்டு விருது வழங்கும் விழா அண்மையில் மிகக் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு, விழா பேங்க் ராக்கியாட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்கள், தங்களது துறைகளில் சிறந்து விளங்கிய தொழில் முனைவர்கள், சமூக ஊடகத்தில் சிறப்பு சாதனைகள் புரிந்தவர்கள் உள்ளிட்ட பலருக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

அவ்வகையில், இந்தியாவின் பிரபலமான LOOKS Salon நிறுவனத்தின் கோலாலம்பூர் கிளை நிர்வாகி மஹா கணேஷ், இந்த ஆண்டிற்கான சிறந்த இளம் தொழில் முனைவர் (Young Entrepreneur Award) விருதைப் பெற்றார்.

கோலாலம்பூரில் மிக உயர்தர ஆண்–பெண் அழகு பராமரிப்பு மையத்தை பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக நடத்தி வரும் அவர், தனது சலூனில் புதிய தொழில்நுட்பங்களை இணைத்து வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னேற்றம் மற்றும் சாதனைகளுக்காகவே அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

மேலும், அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச விருது நிகழ்ச்சியிலும் “மிக வேகமாக வளர்ந்து வரும் சலூன்” என்ற விருதை LOOKS Salon கோலாலம்பூர் கைப்பற்றியது.

இந்த விருது விழாவில் மஹா கணேஷின் தாயார் மகாஸ்வரி அவர்களும் கலந்து கொண்டு மகனின் வெற்றியை பகிர்ந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular