Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இணைய விளையாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது – தியோ

இணைய விளையாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அரசாங்கம் விரிவாக மதிப்பாய்வு செய்து வருவதோடு, கூடுதல் கருத்துகளை பெற சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

இணைய விளையாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பில் குழந்தைகளின் பாதுகாப்பு அபாயங்கள் மீதான பார்வையை அரசாங்கம் கொண்டிருப்பதை உறுதி செய்ய இந்த அணுகுமுறையின் நோக்கம் என தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

“இத்தளங்களில் இருக்கும் உள்ளடக்கம் தற்போது உரிமம் பெற்ற சேவையாக இல்லாவிட்டாலும், தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 [சட்டம் 588], பிரிவு 233 இன் கீழ் ஓர் உள்ளடக்கம் சட்டவிரோதமானது என கண்டறியப்பட்டால், எந்தவொரு தனிநபர் அல்லது அதிகாரியாலும் புகார் அளிக்கப்பட்டால் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படலாம்.” என்றார்.

“அதன் நடவடிக்கைகளில் உள்ளடக்கத்தை நீக்குவதற்கான கோரிக்கைகள், கூடுதல் விசாரணைகள் அல்லது தொடர்புடைய வலைத்தளங்களில் கட்டுப்பாடுகளுக்கான கோரிக்கைகள் போன்றவை நடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிகளில் அடங்கும்.” என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.

இருப்பினும், வன்முறை, குற்றம், சூதாட்டம் போன்ற கூறுகளுக்கு ஆளாகாமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணைய பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும். சாதனங்கள் குழந்தைகளைப் பராமரிப்பவர்கள் அல்ல, சாதனங்கள் பெற்றோருக்கு மாற்றாக இல்லை என்பதை வலியுறுத்த வேண்டும்.

முன்னதாக சமூக ஊடகங்கள் மற்றும் இணைய விளையாட்டுகள் தளங்கள் உட்பட இலக்கவியலில் பாலுணர்வை தூண்டக்கூடிய செயல்பாடுகளைக் கண்காணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மேலவையில் கேள்வி பதில் அமர்வின் போது செனட்டர் நோர்ஹாஸ்மிமி அப்துல் கானியின் கேள்விக்கு துணையமைச்சர் பதிலளித்தார்.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) மூலம் தொடர்பு அமைச்சு, குழந்தைகளின் பாலியல் தொடர்பாக சமுக வளைத்தளங்களில் பகிர்வது உட்பட தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கத்தைக் தொடர்ச்சியாக கண்காணிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular