Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

2025 ஆசிய போக்குவரத்து கண்காட்சியில்(TXA) பாத்தேக் ஏர் பங்கு பெற்றது!

இந்த கண்காட்சியின் ஒரு அங்கமாக “விமான போக்குவரத்து எதிர்காலம்: வளர்ச்சிக்கான வலுவூட்டப்பட்ட மலேசியா விமான போக்குவரத்து-பொருளாதாரத்திற்கு விமானப் போக்குவரத்தின் மதிப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற குழு அமர்வில் பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டார்.
CAAM-இன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கேப்டன் நோராஸ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கேப்டன் இஸாம் இஸ்மாயில்,IATA ஆசியா பசிபிக் துணைத் தலைவர் ஷெல்டன் ஹீ மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பெஞ்யாமின் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலேசியாவின் பொருளாதார போட்டித் தன்மைக்கு ஒரு மூலோபாய உதவியாளராக விமான போக்குவரத்து எவ்வாறு செயல்படுகிறது, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை இயக்கும் அதே வேளையில் மக்கள், பொருட்கள் மட்டும் யோசனைகளை எவ்வாறு இணைக்கிறது என்பது குறித்து இந்த அமர்வில் விரிவாக பேசப்பட்டது.
ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு மலேசியாவில் ஒரு முக்கிய மையமாக வலுப்படுத்துவதில் விமான இணைப்பின் பங்கு, ஒரு சிறந்த மற்றும் மிகவும் மீள் தன்மை கொண்ட விமான சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்க டிஜிட்டல் மையமாக்கல் மற்றும் நிலைத்தன்மையின் ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்தியம் முழுவதும் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்த KLIA-இன் இணைப்பு மற்றும் பாத்தேக் ஏரின் வளர்ந்து வரும் வலை அமைப்பால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகள் குறித்து இந்த அமர்வில் குழு உறுப்பினர்கள் விவாதித்தனர்.
சக தொழில் தலைவர்களுடன் ஈடுபடுவது, மலேசிய விமான போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில்,
APAC முழுவதும் பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிக்கும் அதே வேளையில் தடையற்ற இணைப்பை வழங்குவதில் பாத்தேக் ஏரின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular