
பயணிகள் மைய புத்தாக்கத்திற்கான (FTE) APAC விமான நிறுவன விருதை உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா வென்றது.
ஆசியாவில் மலிவு கட்டண விமான பயணத்திற்கு முன்னோடியாக விளங்கியதை அங்கீகரிக்கும் வகையில் சிங்கப்பூரில் இந்த விருது வழங்கப்பட்டது.
மேலும் ஏர் ஆசியாவின் உலகத் தர சேவை, தானியங்கி முறை, டிஜிட்டல் மற்றும் நெகிழ்வான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
இப்பொழுது Air Asia MOVE செயலியின் வழி பயணிகள் தடையின்றி எளிதாக தங்களின் பயணத்தை திட்டமிட்டு கொள்ளலாம்.
இந்த செயலியில் தானியங்கி செக்-இன், இருக்கைகளை தேர்வு செய்தல் உட்பட பல வசதிகள் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பயணிகள் எளிதாக பயணிக்க மற்றும் தடையின்றி சேவையை வழங்குவது தாங்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாக ஏர் ஆசியா தலைமை உருமாற்று அதிகாரியும் மற்றும் தலைமை விமான நிலைய மற்றும் பயனளிகள் அனுபவ அதிகமான கேசவன் சிவானந்தம் கூறினார்.
நாள் ஒன்றுக்கு 130 நகரங்களுக்கு சுமார் 2 லட்சம் பயணிகளை ஏர் ஆசியா கொண்டு செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
செயற்கை தொழில்நுட்பம்(AI) மற்றும் அதிநவீன செயல்பாட்டை கொண்டு தனது பயணிகளுக்கு சிறந்த சேவைகளை ஏர் ஆசியா வழங்கி வருவதாக அவர் சுட்டி காட்டினார்.
உலகளவில் இந்த விமான நிறுவனம் வளர்ச்சி கண்டு வருவதால், அதிநவீன அணுகுமுறையின் மூலம் தனது பயணிகளுக்கு தடையற்ற மற்றும் நிறைவான சேவைகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
‘எங்களின் புதிய மொபைல் புறப்பாடு கட்டுப்பாட்டு முறையின் மூலம் இந்நிறுவனத்தின் Allstars சுறுசுறுப்பாக பணியாற்ற முடிகிறது’ என்றார் அவர்.
இதனிடையே விமான போக்குவரத்து துறையில் புத்தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஏர் ஆசியா முன்னணியில் இருந்து வருவதாக FTE தலைமை செயல்முறை அதிகாரி ரியான் ஃகீ கூறினார்.
அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு பயணிகளுக்கு எளிதான மற்றும் தடையற்ற சேவைகளை ஏர் ஆசியா வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் 2025 FTE APAC விமான நிறுவன விருதை பெறும் அனைத்து தகுதிகளும் ஏர் ஆசியாவிற்கு உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
விமான போக்குவரத்து துறையில் ஏர் ஆசியா சாதனையை படைத்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த விமான நிறுவனம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 100 கோடி பயணிகளை ஏர் ஆசியா கொண்டு சென்று உள்ளதாக அவர் சொன்னார்.
தனது பயணிகளுக்கு உலகத் தர சேவை மற்றும் இனிய பயண அனுபவத்தை ஏர் ஆசியா வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஏர் ஆசியாவின் பயணிகள் நிகழ்வு மற்றும் உருமாற்ற பிரிவின் தலைவர் எலெக்ஸியா லியோங் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.


