
ஜொகூர் பாரு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சீனாவின் குன்மிங் வேண்டும் நகருக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவையை தொடங்குகிறது
தென் பகுதி விமான மையத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய வழித்தடத்தை உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தொடங்குகிறது.
மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே மலிவு கட்டண விமான சேவையை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் இந்த புதிய வழித்தடம் அமைகிறது.
இந்த புதிய விமான சேவை ஜொகூர் மற்றும் யூனான் மாகாணத்திற்கிடையே வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்ற வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.
‘வசந்த நகரம்’ என புகழுடன் அழைக்கப்படும் குன்மிங் நகருக்கு வாரத்திற்கு 3 விமான சேவைகளை எதிர் வரும் 14 டிசம்பர் 2025 முதல் ஏர் ஆசியா மேற்கொள்ள விற்கிறது.
இதற்கு மெருகூட்டும் வகையில் கோலாலம்பூரிலிருந்து குன்மிங் நகருக்கு வாரத்திற்கு 14 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொண்டு வருகிறது.
ஜொகூர் மற்றும் அண்டை நாடான சிங்கப்பூரை சேர்ந்த பயணிகள் இந்த புதிய விமான சேவையின் மூலம் குன்மிங் நகருக்கு எளிதில் சிறகடிக்க முடியும்.
இதனிடையே இந்த புதிய விமான சேவையின் மூலம் இப்பிராந்தியத்திற்கிடையே மலேசியாவின் இணைப்பை உலகத்திற்கு மறு வரையறை செய்ய முடியும் என ஏர் ஆசியா மலேசியா தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
கோலாலம்பூருக்கு அப்பால் தனது விமான சேவையை விஸ்தரிக்கும் வகையில் ஜொகூர் பாரு-குன்மிங் நேரடி விமான சேவை அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஜொகூர் பாருவை குன்மிங் நகருக்கு நேரிடையாக இணைப்பதின் வழி சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த புதிய விமான சேவையின் மூலம் ஜொகூர் பாருவை சேர்ந்த பயணிகள் குன்மிங் நகரின் வளமான கலாச்சாரம் மற்றும் அழகிய நிலப்பரப்பை கண்டு ரசிக்க முடியும் என்றார் அவர்.
இந்த புதிய விமான சேவையை கொண்டாடும் வகையில் ஜொகூர் பாரு-குன்மிங் நகருக்கு ஊக்குவிப்பு கட்டணமாக அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம் வெ 469-லிருந்து தொடங்குகிறது.


