
சபா மாநிலத்தின் தாவாவ் நகரில் அமைந்திருக்கும் திருமுருகன் ஆலயத்திற்கு தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சிறப்பு வருகை புரிந்தார்.
இந்த ஆலயத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் இங்குள்ள இந்திய சமூகத்துடன் துணையமைச்சர் சரஸ்வதி கலந்துரையாடினார்.
நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் இவர்கள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆலயம் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு சமூக மையமாக இருப்பதை உறுதிப்படுத்துவதில் இவர்கள் முக்கிய பங்காற்றி வருவது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று என்றார் அவர்.
இந்நாட்டில் உள்ள ஆலயங்கள் சமூக மையமாக உருமாற்றம் பெறுவதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.


