
சமூக ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மிரட்டல்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய ஒரு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
தேசிய பொது சமூகங்களின் புகார் மையம்(RAKAN) என்ற இந்த இலக்கியவியல் தளத்தின் மூலம் சமூக ஒற்றுமையை பாதிக்கும் மிரட்டல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக புகார் செய்யலாம் என்றார் அவர்.
தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் RAKAN மற்றும் e-Sepakat தளத்தின் வழி செய்யப்படும் இது போன்ற புகார்கள் குறித்து தமது அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நேற்று மக்களவையில் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் சாஹாட் எழுப்பி கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
சமூக மிரட்டல் தொடர்பான புகார், இன்னும் அல்லது மத பதற்ற சம்பவங்கள், இனவாத அல்லது இன பேத சம்பவங்கள், நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலான இன சர்ச்சைகள், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் இந்த தளத்தின் வழி உடனடியாக புகார் செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டிலுள்ள பல்லின சமூகங்களில் ஒற்றுமையை பேணுவதே தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.


