
மாணவர்கள், தொழில் முனைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை தலைமைத்துவ பண்பு கொண்டவர்களாக தோஸ்த் மாஸ்டர் கிளப் உருவாக்கி வருவதாக அதன் தலைவர் தொழிலதிபர் டத்தோ டாக்டர் சமணன் ரத்னம் கூறினார்.
ஒருவர் புது மேடையில் தைரியத்துடன் பேசுவது, பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலை இடங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது போன்ற பயிற்சிகளை இந்த கிளப் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சியின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி படியை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று சன்வே லகூனில் இந்த கிளப்பின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தில் அவர் பேசினார்.

இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு பிரமுகராக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
இந்த வாய்ப்பை குறிப்பாக இந்தி இளைஞர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
18 வயதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த கிளப்பில் அங்கத்தினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த கிளப் உலகளவில் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கிளப்பின் செயல் திட்டங்கள் எதிர்கால தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும் என்றார் அவர்.


