Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தீபாவளியையொட்டி கலாச்சார விழா!

தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி இங்குள்ள டத்தாரான் லோபாக்கில் கலாச்சார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிரம்பான் ஜொயா சட்டமன்ற அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வண்ணக் கோலத்தில் ஜாலான் யாம் துவானை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
பல இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வளர்க்க இந்த கலாச்சார விழா மிக அவசியம் என சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கூறினார்.


குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இது போன்ற கலாச்சார விழா மிகவும் அவசியம் என்றார் அவர்.
இது போன்ற கொண்டாட்டம் பல இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என அவர் சொன்னார்.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம், அனைத்து இனங்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
அதே போல் மாநில மக்கள் நடப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்து தங்களின் பிளவுபடாத ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விழா வெற்றியடையச் செய்ய ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular