Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மாநில தேர்தலை முன்னிட்டு: சபா மக்களுக்குவெ 308க்கு சிறப்பு கட்டணத்தை பாத்தேக் ஏர் வழங்குகிறது!

எதிர் வரும் சபா மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தீபகற்ப மலேசியாவில் உள்ள சபா மக்கள் சென்று வாக்களிக்க குறிப்பிட்ட காலத்திற்கு வெ 309 முதல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பாத்தேக் ஏர் வழங்குகிறது.
எளிதாக மற்றும் நம்பிக்கையுடன் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட இந்த சிறப்பு கட்டணத்தை பாத்தேக் ஏர் வழங்குகிறது.
இந்த முக்கியமான தருணத்தில் தங்கள் குடும்பத்துடன் இணைய இங்குள்ள சபா மக்கள் இந்த சிறப்பு கட்டணத்தில் எளிதாக மற்றும் வசதியாக பயணிக்கலாம்.
கோலாலம்பூர்-கோத்தா கினபாலு, கோலாலம்பூர்-சான்டகாண், கோலாலம்பூர்-தாவாவ் மற்றும் சுபாங்-கோத்தா கினபாலு ஆகிய வழிதடங்களுக்கு பயணிகள் எளிதாக பயணிக்கலாம்.
டிக்கெட்டுகளுக்கான பதிவுக்காலம் இப்பொழுது முதல் 2 நவம்பர் 2025 வரை.
பயண காலம் இப்பொழுது முதல் 30 நவம்பர் 2025 வரை.
இதனிடையே இந்த முக்கியமான தருணத்தில் சபா வாக்காளர்கள் சபாவிற்கு பயணம் செய்ய வேண்டும் என்பதை தாங்கள் நன்று உணர்ந்துள்ளதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
வேலை அலைச்சல் மற்றும் முக்கிய பணிகள் இருந்த போதிலும் இவர்களுக்கு இந்த பயணம் மிகவும் அவசியம் என்றார் அவர்.
தங்களின் பயனும் எளிதாக, நம்பகத் தனமாக மற்றும் சௌகரியமாக இருக்க இந்த குறிப்பிட்ட கால நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பயணிகளின் ஒவ்வொரு வலி பயணத்திற்கும் ஆதரவு தர பாத்தேக் ஏர் கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு கட்டணத்திற்கான காலம் முடிவடைவதற்கு முன்பாக பயணிகள் தங்கள் இருக்கைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த சிறப்பு கட்டணத்திற்கான இருக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால், இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என அவர் ஆலோசனை கூறினார்.
பாத்தேக் ஏருடன் தடையற்ற பயண அனுபவத்தைப் பெற இருக்கைக்கு முந்தி கொள்ளுமாறு அவர் ஆலோசனை கூறினார்.
கூடுதல் தகவல்களுக்கும் உங்களின் அடுத்த பயணத்தை திட்டமிடவும் பாத்தேக் மொபைல் அல்லது www.batikair.com வளம் வரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular