Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஏர் ஆசியா X 18-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பயணிகளுக்கு சிறப்பு கட்டணங்கள்!

ஏர் ஆசியா X-ன் 18 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது பயணிகளுக்கு சிறப்பு கட்டணங்களை வழங்குகிறது.
ஆர்வத்தை தூண்டும் நகர்களுக்கு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறப்பு கட்டணங்களை ஏர் ஆசியா X வழங்குகிறது.
ஏர் ஆசியா X கடந்த 2007-ல் தொடங்கியது முதல் ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள 21 நகர்களுக்கு 50 மில்லியன் பயணிகளை கொண்டு சென்றுள்ளது.
இப்பொழுது முதல் தனது பிறந்த தின நிறைவு நாளான 2 நவம்பர் 2025 வரை அனைத்து நகர்களுக்கும் ஒரு வழி பயணம் கட்டணம் வெ 338 முதல் தொடங்குகிறது.
தைப்பே,பெய்ஜிங்,
சிட்னி,தோக்கியோ,
சியோல்,அல்மாட்டி மற்றும் புதிய நகர்களான தாஷ்காண்ட்,இஸ்தான்புல் ஆகிய நகர்களுக்கு இந்த சிறப்பு கட்டணத்தில் பயணிக்கலாம்.
தனது வளர்ச்சியின் வியூகத் திட்டமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏர் ஆசியா X மத்திய ஆசியாவில் கால் பதித்தது.
கஜகஸ்தானின் அல்மாட்டி, உஸ்பெகிஸ்தானின் தாஷ்காண்ட் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் அவர்களுக்கு விஸ்தரிப்பு கண்டுள்ளது.
புதிய வழித்தடங்களில் கால் பதிக்க ஏர் ஆசியா X தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular