
உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஆசியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஆசியா டிஜிட்டல் இன்ஜினியரிங்
(எடிஇ) ஆகியவற்றில் பணி புரியும் இந்திய பணியாளர்கள் தங்களின் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
சிவானந்தன் சுப்பையா(எடிஇ), பிரேம் குமார்(அரசாங்க உறவுகள்), லிடியா கோஷி(வர்த்தகம்), விஜய் லதா ஆனந்தன்(எடிஇ),
மஹேஸ் குமார்(எடிஇ தலைமை செயல்முறை அதிகாரி), சரவணன் ராஜ் முனிசாமி(எடிஇ),வினோட் கிருஷ்ணன், விமலா பெருமாள்
(எடிஇ) மற்றும் விசித்ரா நடேசன்(தொடர்பு) அனைத்து மலேசிய இந்துக்களுக்கும் மனமார்ந்த தீபத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா உலக பயண விருதுகள் விழாவில் ஏர் ஆசியா தொடர்ந்து 13 வது முறையாக ஆசியாவின் முன்னணி மலிவு கட்டண விமான நிறுவன விருதை தட்டி சென்றது.


