Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கூச்சிங்கில் HWPL அமைதி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது!

கடந்த செப்டம்பரில் நடந்து முடிந்த 18 ஆவது உலக அமைதி உச்சநிலை மாநாட்டை நினைவு கூறும் வகையில், செப் 18 மற்றும் 19 தேதிகளில் HWPL மலேசியா கிளை இந்த கொண்டாட்டத்தை கூச்சிங் நகரில் வெகு சிறப்பாக நடத்தியது.
11 ஆவது உலக அமைதி உச்சிநிலை மாநாடு கடந்த செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தென் கொரியாவின் சியோங்ஜூ நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.
உலக அமைதி லட்சியம் என மக்கள் கருதுகின்றனர். ஆனால் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் அது லட்சியமாகும் என HWPL மலேசியா கிளையின் நிர்வாகி நிங் போங் கூறினார்.
உள்ளூர் அமைப்புக்களுடன் தொண்டூய திட்டங்கள் மற்றும் அமைதி கல்வி ஆகியவற்றின் வழி இந்த கனவுகள் இலட்சியமாகும் என அவர் குறிப்பிட்டார்.
அமைதிக்கான நமது பணி இப்பொழுது தான் தொடங்கியுள்ளது. இதில் அனைத்து தரப்படுகிறேன் பங்குகள் மிக அவசியம் என்றார் அவர்.
இதனிடையே ஒற்றுமைக்கு வர்ணம் மற்றும் மத பேதம் தடையாக இருக்கக் கூடாது என HWPL மலேசிய கிளையின் உதவி தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் அண்ணாமலை கூறினார்.
ஒருவருக்கு உதவி தேவை என்றால் இன மற்றும் மத பேதமின்றி நாம் உடனே உதவி செய்ய முன்வர வேண்டும் என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் யாரை நினைத்தும் நாம் அஞ்ச தேவை இல்லை.
ஒருவருக்கு உதவி தேவை என்றால், நாம் உடனே அங்கு சென்று துணை நிற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


இந்த மாநாட்டில் பிரம்ம குமாரிகள் அறவாரியம், சரவாக் எக்கோ வோரியர்ஸ்,i-CATS பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த சுமார் 150 பேராளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கொண்டாட்டத்தில் முக்கிய அம்சமாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியின் வாழ்த்துறையின் காணொளியும் திரையிடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் சரவாக் புக்கிட் செமுஜா சட்டமன்ற உறுப்பினர் ஜோன் இல்லுஸ்,பாடாவான் மாநகர மன்ற உறுப்பினர் ஜெரால்ட் கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலக அமைதிக்கு ஒற்றுமையை பரதானம் என ஜெரால்ட் கோ கூறினார்.
நிங் போங் தலைமையிலான HWPL மலேசிய கிளை வெகு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் HWPL மலேசிய கிளைக்கு தம்மால் என்ற ஆதரவை தொடர்ந்து வழங்கி வரப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு HWPL இயக்கம் முதல் முறையாக தொடங்கப்பட்டது முதல், உலக அமைதி பணிகளை இந்த இயக்கம் வலிமையுடன் செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்நாள் வரை உலகளவில் 170 நாடுகளில் இந்த இயக்கத்தில் 560,000 உறுப்பினர்கள் இணைந்துள்ளதுள்ளனர்.
இந்த இயக்கத்தில் மலேசியா தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதனிடையே சர்ச்சை அல்லது கருத்து வேறுபாடு வரவேற்கத்தக்க ஒன்றல்ல என HWPL இயக்கத்தின் தலைவர் Lee Man-hee கூறினார்.


அமைதிக்கான சாதனையே வரவேற்கத்தக்க ஒன்று என தமதுரையில் அவர் சுட்டிக் காட்டினார்.
நமது காலத்தில் இந்த உலக அமைதியை நாம் நிலைநிறுத்தா விட்டால் நமது தலைமுறை சிரமங்களை எதிர் நோக்க நேரிடும் என அவர் சுட்டிக் காட்டினார்.
உலக அமைதியை மட்டுமே நாம் இறுதியில் வெட்டி செல்ல வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
தொண்டூழிய திட்டங்கள் மற்றும் இளைஞர் அமைதி கருத்தரங்களின் வழி அமைதி திட்டங்களை HWPL தொடர்ந்து நடத்தும் ஏன் அவர் உறுதி அளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular