Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பள்ளிகளில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு கல்வி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்!

அண்மைய காலமாக நாட்டில் பள்ளிகளில் நடந்துள்ள கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களுக்கு கல்வி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.பி பிரேம் சாடினார்.
அண்மைய காலங்களில் நாட்டில் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் நடந்துள்ள கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கது என்றார் அவர்.
இந்த அசம்பாவிதங்கள் காணொளிகளில் வைரலாகி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரங்களில் கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் ஏன் மௌனம் சாதித்து வருகிறார் என அவர் கேள்வி எழுப்பினார்.
பள்ளிகளில் கட்டொழுங்கு விவகாரங்களில் தலைமை ஆசிரியர்கள் அலட்சியப்போக்கை கடைப்பிடித்து வருவதே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற அசம்பாவிதங்களால் குறிப்பாக இடைநிலைப் பள்ளிகளுக்கு தங்களின் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க கல்வி அமைச்சு புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular