
உஸ்பெகிஸ்தான் தலைநகரான தாஷ்கண்ட் நகருக்கு ஏர் ஆசியா எக்ஸ் தனது நேரடி விமான சேவையை தொடங்கியது.
இந்த நேரடி விமான சேவையானது ஆசியான் மற்றும் மத்திய ஆசியாவை இணைப்பதை மேலும் வலுப்படுத்தி உள்ளது.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்தை முன்னிட்டு அனைத்துலக சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்த இந்த புதிய வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த பிரச்சாரத்தில் 47 மில்லியன் அனைத்துலக சுற்றுப்பயணிகளை தெரிவிக்கவும் இதன் வழி வெ 329 பில்லியன் வருவாயை ஈட்டவும் அரசாங்கம் இலக்கை கொண்டுள்ளது.
இந்த புதிய சேவையின் மூலம் மத்திய ஆசியாவிலிருந்து அதிகமான சுற்றுப் பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024-ல் தொடுக்கப்பட்ட கோலாலம்பூர்-அல்மாட்டி விமான சேவையின் மூலம் மலேசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கிடையே சுமார் 165,000 பயணிகள் பயணித்துள்ளனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்த புதிய வழித்தடம் பெரும் வெற்றியை தரும் என ஏர் ஆசியா எக்ஸ் எதிர்பார்க்கிறது.
இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலாத்துறை வலுப்படுத்தும் வகையில் ஏர் ஆசியா எக்ஸ் மற்றும் உஸ்பெகிஸ்தான் சுற்றுலாத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
இதனிடையே இந்த புதிய விமான சேவை மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறையை வலுப்பெறு செய்யும் என ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கமாருடின் மெரானுன் கூறினார்.
மத்திய ஆசியாவில் தனது விஸ்தரிப்பின் மூலம் 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்திற்கு ஏர் ஆசியா எக்ஸ் தொடர்ந்து ஆதரிக்கும் என்றார் அவர்.
மலிவான பயணம், பொருளாதாரம் வளர்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றங்களுக்கு ஏர் ஆசியா தொடர்ந்து தனது பங்கை ஆற்றி வரும் என அவர் குறிப்பிட்டார்.
மத்திய ஆசியாவில் தொடர்ந்து கால் பதிக்க இன்னும் பல புதிய நகர்களுக்கு சிறகடிக்க ஏர் ஆசியா எக்ஸ் திட்டம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் ஏர் ஆசியா எக்ஸ் முக்கிய பங்காற்றி வரும் என அவர் தெரிவித்தார்.
உலகின் முன்னணி மலிவு கட்டண விமான நிறுவனம் என்ற நிலையில் ஏர் ஆசியா இன்னும் பல புதிய நகரங்களுக்கு சிறகடிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது ஆசியான், ஆஸ்திரேலியா மட்டும் அதற்கு அப்பாற்பட்ட சுமார் 130 நகரங்களுக்கு ஏர் ஆசியா சிறகடித்து வருவதாக அவர் சொன்னார்.
தனது பயணிகளுக்கு மலிவான கட்டணத்தில் மன நிறைவான சேவையை வழங்குவதே எங்களின் இலக்கு என்றார் அவர்.தாஷ்காண்ட் ஹயாட் ரிஜென்ஸி ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஒப்பந்த கையெழுத்தில் ஏர் ஆசியா எக்ஸின் வர்த்தக பிரிவு தலைவர் லியானா மஹிஸா, ஏர் ஆசியா எக்ஸ் நிர்வாக தலைவர் டத்தோ ஃபாம் லீ யீ, கேப்பிட்டல் ஏ நிர்வாகத் தலைவர் டத்தோ கமாருடின் மெரானுன் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பென்ஜாமின் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.


