
டுவிங்கள் மழலையர் பள்ளியின் தீபாவளி வாழ்த்துக்கள்
டுவிங்கள் மழலையர் தங்களின் பராமரிப்பில் இருந்து வரும் குழந்தைகளுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இங்கு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என டுவிங்கள் மழலையர் பள்ளியின் நிறுவனர் நித்யா மேரி கேட்டுக்கொண்டார்.
தங்களின் மழலையர் பள்ளிக்கு ஆதரவை வழங்கி வரும் அனைத்து பெற்றோர்களுக்கும் அவர் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
டுவிங்கள் மழலையர் பள்ளி கடந்த 2020 முதல் பழைய கிள்ளான் சாலையில் உள்ள தாமான் டேசாவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பராமரிக்கப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் முறையான சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மழலையர் பள்ளி வெற்றிகரமாக செயல்படுவதற்கு இப்பள்ளியின் மீது பெற்றோர்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என அவர் சொன்னார்.
ஆகையால் இவ்வட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள் இப்பள்ளிக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


