
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த மடானி அரசாங்கத்தின் 2026 பட்ஜெட் மிகவும் வரவேற்கத்தக்கது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கூறினார்.
ஏழை மக்களின் வாழ்க்கை செலவினத்தை குறைக்க இந்த பட்ஜெட்டில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பி40 மக்களுக்கான உதவித்திட்டங்களுக்கு பிரதமர் மிகவும் முன்னுரிமை வழங்கி உள்ளதாக முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் சொன்னார்.
அதே வேளையில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கான தொழில் திறன் கல்விகளுக்கு (டிவேட்) வெ790 கோடி அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று என்றார் அவர்.
இந்த பட்ஜெட்டில் தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு பிரதமர் முக்கியத்துவம் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பகாங் மாநிலத்தில் ஒரு புதிய தமிழ் பள்ளி கட்டப்படும் என பிரதமரின் உறுதிமொழி மிகவும் வரவேற்கத்தக்கது என்றார் அவர்.
மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக நலன்களுக்கு பிரதமர் முக்கியத்துவம் வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் தாக்கல் செய்துள்ள இந்த வரவு செலவுத் திட்டம் குறிப்பாக ஏழை சமூகத்தின் சுமைகளை மிகவும் குறைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


