
எதிர் வரும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜொகூர் பாரு, லிட்டில் இந்தியாவில் 40,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது.
இந்தப் உணவுப் பொட்டலங்கள் விநியோகிப்பு ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃஸ் காஸி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வெ49 லட்சம் மதிப்புள்ள இந்த உணவு கூடைகள் 40,000 இந்திய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தீபாவளி கொண்டாட்ட காலங்களில் இந்திய மக்களுக்கு ஜொகூர் மாநில அரசாங்கம் உதவி வருவதை இது காட்டுகிறது என மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜொகூர் மஇகா தலைவருமான ரவீன் குமார் கூறினார்.

மாநில அரசாங்கம் அனைத்து சமூகங்களையும் அரவணைத்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த வரலாற்று பூர்வ கொண்டாட்டத்தில் ஜொகூர் பாரு டத்தோ பாண்டார்,ஹாஜி அமாட், மாநில போலீஸ் படைத்த தலைவர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட், சுல்தான் ரோகாயா அரவாரியத் தலைவர் டத்தோ சுகுமாரன் சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


