
11 ஆவது HWPL உலக அமைதி மாநாடு தேசிய நிலையில் வரும் அக் 12 ஞாயிற்றுக்கிழமை கூச்சிங்கில் நடைபெறுகிறது.
இந்த மாநாடு சரவாக் காம்ப்ளெக்ஸ் பெலியா டான் சுக்கான் அரங்கில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
அனைத்துலக நிலையில் கடந்த செப் 18,19 ஆகிய தேதிகளில் இந்த உச்சநிலை மாநாடு தென் கொரியாவின் தலைநகரான சியோலில் உள்ள சியோங்ஜூ நகரில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை தேசிய நிலையில் கூச்சிங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.
உலக அமைதியின் அவசியம் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக பேசப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
இந்த மாநாட்டில் சரவாக் புக்கிட் செமுஜா சட்டமன்ற உறுப்பினர் ஜோன் அனாக் இலுஸ், பிரம்ம குமாரிகள் அறக்கட்டளையின் சரவாக் கிளைத் தலைவர் லோ ஃபு மின், HWPL விளம்பரத் தூதரும் அலை ஓசை ஊடகத்தின் தலைமை ஆசிரியருமான நவநீத கிருஷ்ணன் ரத்தினம், HWPL மலேசியா கலையின் நிர்வாகி நிங் போங், அதன் செயலவை உறுப்பினர்கள் ஃகெலி மிங்,அமெலியா இயோ, கிரிஸ்டின் வோங்,HWPL மலேசியா கிளையின் உதவித்தலைவர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் சமய தலைவர்கள், கல்விமான்கள் உலக அமைதியின் அவசியம் குறித்து உரை நிகழ்த்துவர்.


