Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மக்களை முன்னிலையில் வைக்கும் பட்ஜெட்! – போம்கா வரவேற்பு!

நேற்று மக்களவையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2026 மடானி பட்ஜெட் அரசாங்கம் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம்
(போம்கா) வரவேற்றது.
13 ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட் மக்கள் இதை நோக்கி வரும் வாழ்க்கை செலவினத்திற்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளதாக போம்கா தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் சரவணன் தம்பி ராஜா கூறினார்.
இந்த விவகாரத்தில் பயனீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை திருத்த உள்ளதாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு போம்கா முழுமையான ஆதரவை வழங்கும் என்றார் அவர்.
பட்ஜெட் கலந்துரையாடல்களில் இந்த விவகாரத்தை போம்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் அரசாங்கத்தின் நிலைப்பாடு பயனீட்டாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்ட திருத்தம் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு தளவாடங்களில் குறைபாடு உள்ள பழுது பார்க்க, மாற்ற அல்லது திரும்ப பணத்தைப் பெற அனுமதி வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பயனீட்டாளருக்கு நிதி இழப்பை தவிர்ப்பது மட்டுமின்றி, பொருட்களின் தர நிர்ணயத்தை அதிகரிக்கும் என்றார் அவர்.
ஏற்கனவே இந்த புதிய சட்டத்தை அமலாக்கம் செய்து வரும் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவிற்கு இணையாக மலேசியா வழங்க முடியும் கன் அவர் சொன்னார்.
பயனீட்டாளர் கடன் சட்டம் மற்றும் இணைய மோசடி மசோதா ஆகியவற்றின் வழி பயனீட்டாளர் பாதுகாப்பு வலிமை அடைந்து வருவதை போம்கா வரவேற்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
2026 பட்ஜெட் குடும்பங்களுக்கு உதவுவதில் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருவது பாராட்டக்கூடிய ஒன்று என்றார் அவர்.
அரசாங்கத்தின் தொடர் ரஹ்மா நிதி உதவி(STR) மற்றும் ரஹ்மா அடிப்படை நிதி உதவி( SARA) திட்டங்களால் 90 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த த் திட்டங்களின் மூலம் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள் ஆண்டிற்கு வெ 4,600 கிடைக்கப் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களில் தனிநபர்கள் ஆண்டிற்கு வெ 600 பெறுகின்றனர்.
e-kasih குடும்பங்கள் மாதந்தோறும் வெ 200 பெற்று வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கை செலவீனத்தை சமாளிக்க அரசாங்கம் வெ 100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளன.
இதன் கீழ் ஒவ்வொரு தொகுதிகளிலும் மலிவான அத்தியாவசிய பொருட்களை வாங்க பாயோங் ரஹ்மா மற்றும் ரஹ்மா விற்பனை திட்டங்களுக்கு வெ 600 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக சபா மற்றும் சரவாக்கிள் தளவாடங்களை கொண்டு செல்லும் திட்டத்தை ஆதரிக்க வெ 250 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் போக்குவரத்து செலவினம் குறைவதோடு உணவுகளின் விலையும் குறையும் என்றார் அவர்.
மின்சாரம், டீசல் மற்றும் RON95 போன்ற எரிபொருள்களின் விலை நிலைத்தன்மை படுத்தப்படுவதால் ஆண்டொன்றிற்கு வெ 15.5 பில்லியனை அரசாங்கம் சேமிக்க முடியும் என அவர் தெளிவுபடுத்தினார்.
வீட்டுடைமை கடன் உத்திரவாத நிறுவனம் திட்டத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை போம்கா பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மடானி அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை அரசாங்கம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்பு மற்றும் காப்புறுதி திட்டத்திற்கு சலுகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular