Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கொழும்புவில் மகளிர் தொழில் முனைவர் விருதளிப்பு விழாவில் துணையமைச்சர் சரஸ்வதி!

கொழும்பு அக் 10
இலங்கை தலைநகரான கொழும்புவில் மகளிர் தொழில் முனைவர் விருதளிப்பு விழாவில் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி துணையமைச்சர் சரஸ்வதிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.


வர்த்தக உலகில் பெண்களின் ஆளுமையை, தலைமைத்துவம் மற்றும் புத்தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருதளிப்பு விழாவில் கலந்து கொண்டதில் தாம் பெருமை கொள்வதாக சரஸ்வதி தெரிவித்தார்.
வர்த்தக உலகில் பெண்களின் ஆற்றல் மற்றும் தலைமைத்துவத்திற்கு இது போன்ற அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular