
உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு மதுபான தொழில்துறை வெ7.1 பங்களிப்பை வழங்கியுள்ளது.
கார்ல்ஸ்பெர்க் மதுபான உற்பத்தி நிறுவனம் மற்றும் ஹெய்னெகன் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் உள்ளடக்கிய மலேசிய மதுபான உற்பத்தியாளர்களின் சம்மேளனம் மலேசியாவில் மதுபான உற்பத்தி துறையின் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆசியா பொது கொள்கை கழகம் நொட்டிங்ஹாம் மலேசியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.
மதுபான தொழில்துறை வரி வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கிடையே மலேசியா மதுபான உற்பத்தியாளர்கள் சம்மேளனம் ஆண்டுதோறும் நாட்டின் மொத்த உற்பத்தியில் வெ7.1 பில்லியன் பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்த தொழில்துறை 52,400 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளதோடு, வருடாந்திர வரி வருவாயில் வெ3.3 பில்லியனை வழங்கியுள்ளது.
உற்பத்தி துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக, மதுபானம் தயாரிக்கும் தொழில்துறை தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4% மற்றும் மலேசியாவின் மொத்த வரி வருவாயில் 1.5% பங்களிப்பை வழங்கியுள்ளது.
இதனிடையே வரிகள் மூலம் மட்டுமல்லாமல் உற்பத்தி, தளவாடங்கள், சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் துறைகளில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளை இயக்குவதன் மூலமும் மலேசியாவின் பொருளாதாரத்திற்கு மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக கார்ல்ஸ்பெர்க் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸாடெஃபானோ கிளினி மற்றும் ஹெய்னெகன் மலேசியா பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குனர் மார்டிஜ்ன் வான் குய்லென் கூட்டறிக்கை ஒன்றில் கூறினர்.
அதே வேளையில் சட்டவிரோத வர்த்தகத்தை முறியடிக்க நிதி அமைச்சின் தலைமையிலான பல அமைப்புகளை கொண்ட பணிக்குழுவின் நடவடிக்கைகளை தாங்கள் இவர்கள் பாராட்டினர்.
சட்டவிரோத பீர் கடத்தல் மற்றும் விற்பனையை முறியடிக்க அரச மலேசிய சுங்கத்துறை இலாகா மற்றும் அரச மலேசிய போலீஸ் படை ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மலேசியாவின் நீண்ட கால மேம்பாட்டு முக்கியத்துவத்திற்கு தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்க தாங்கள் உறுதி கொண்டுள்ளதாக கூட்டறிக்கையில் இவர்கள் தெரிவித்தனர்.


