
இன்று புத்ரா ஜெயாவில் தர்ம மடானி திட்டத்தின் கூட்டத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தலைமை தாங்கினார்.
தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சின் துணை தலைமைச் செயலாளர்(நிர்வாகம்) டத்தோ முகமட் அஸான், நிதி மற்றும் மேம்பாட்டு பிரிவின் செயலாளர் கைருலிஸாம், தேசிய ஒருங்கிணைப்பு பிரிவின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தர்ம மடானி பணிக்குழு உடன் ஒன்று இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சு இந்தத் திட்டத்தை அமலாக்கம் செய்யும் என இந்த கூட்டத்தில் ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டதாக சரஸ்வதி தெரிவித்தார்.
200 இந்து வழி பாட்டு தலங்களை சமூக மையமாக உருமாற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள வெ 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த கூட்டத்தில் இன்னும் பல விவகாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.


