Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

50 ஆவது ஆண்டு தீட்சை நிறைவு விழா மற்றும் குருபூஜை

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் 50 ஆவது ஆண்டு தீட்சை நிறைவு விழா மற்றும் குருபூஜை நாளை 28 ஆகஸ்டு ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஓங்காரக்குடிலாசான் மகான் ஆறுமுக அரங்கமாகா தேசிக சுவாமிகள் நல்லாசியுடன் காலை 9 மணிக்கு சிரம்பான் ஸ்ரீ ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் இந்த தீட்சை திருவிழா மற்றும் குருபூஜை நடைபெறுகிறது.


இந்த விழாவில் ஓங்காரக்குடிலாசான் அருளாசி பெற்ற தமிழ்நாடு சிறப்பு ஆன்மீக சொற்பொழிவாளர் டி. ரெங்கநானின் ஆன்மீக சொற்பொழிவும், மலேசிய டி.வி. புகழ் ஜீவாவின் சித்தர் பாடல் இன்னிசையும், அதைத் தொடர்ந்து பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும் நடைபெறும். அதுசமயம் கலந்து கொள்ளும் ஆன்மீக பெருமக்கள் அனைவருக்கும் ஞானிகளைப் பூஜித்த அருட்பிரசாத அன்னதானமும் வழங்கப்படும்.
ஞானிகள் அருளைப் பெற அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என மகான் பாதஞ்சலியார் சன்மார்க்க சங்கத்தின் தலைவர் வி. முனியாண்டி கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.
இந்த விழா தொடர்பான மேல் விவரங்களுக்கு கீழ்கண்ட தமது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.
தொடர்புக்கு: 0192398743

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular