
எதிர் வரும் 8 டிசம்பர் 2025-ல் ஒன்பது புதிய பயண வழிகளில் முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.
குறிப்பிட்ட ஒரே நாளில் இந்த விமான நிறுவனம் பல நகர்களுக்கு புதிய பயண வழிகளில் சேவையை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
மலேசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பாத்தேக் ஏர் வலிமையாக கால் பதித்து வருவதை இது காட்டுகிறது.
சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் கோலாலம்பூர் நகர் விமான நிலையமாக உருமாற்றம் பெற்று வரும் வேளையில்,பாத்தேக் ஏரின் இந்த விரிவாக்கம் பொருத்தமாக அமைந்துள்ளது.
பாத்தேக் ஏரின் வளர்ச்சி இலக்கில் சுபாங் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு பாத்தேக் ஏர் சிறந்த சேவையை வழங்க முடியும்.
இங்கிருந்து சிங்கப்பூர், ஜாக்கார்த்தா, லங்காவி மற்றும் ஜொகூர் பாரு ஆகிய நகர்களுக்கான புதிய பயண வழிகளின் மூலம், பயணிகள் எளிதான போக்குவரத்து மற்றும் தாங்கள் விரும்பும் நகர்களுக்கு பயணிக்க முடியும்.
அரசாங்கத்தின் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலைய உருமாற்றத் திட்டத்திற்கு பாத்தேக் ஏரின் ஆதரவை இந்த விரிவாக்கம் காட்டுகிறது.
வட மலேசியாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த பினாங்கை ஒரு முக்கிய மையமாக பாத்தேக் ஏர் திட்டமிட்டு வருகிறது.
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மேடான்,கூச்சிங் மற்றும் கோத்தா கினபாலு நகர்களுக்கு சிறகடிக்கவிருக்கிறது.
சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து ஈப்போவிற்கு புதிய பயண வழியாக பாத்தேக் ஏர் அறிமுகம் செய்கிறது.
அதேவேளையில் ஈப்போ மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்குகிறது.
இவ்விரு நகர்களுக்கு இடையிலான நேரடி விமான சேவை வார இறுதி பயணிகள், வர்த்தக பயணிகள் மற்றும் கலாச்சார பயணிகளுக்கு இது ஏதுவாக அமைகிறது.
மலேசிய பயணிகளுக்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த தேர்வான நகரமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
எதிர் வரும் நவம்பர் 2025 முதல் பாத்தேக் ஏர் உட்பட அனைத்து லையன் குழும விமானங்களும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 4 ஆம் முனயத்திலிருந்து விமான சேவைகளை மேற்கொள்ளும்.
இதனிடையே இந்த விரிவாக்கம் கவனமான திட்டமிடுதலை பிரதிபலிப்பாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
ஆசியானில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களை இணைக்கவும் பாத்தேக் ஏர் கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டிற்கான பிரச்சாரத்திற்கு தயாராகும் வகையில் சுபாங் மற்றும் பினாக்கில் பாத்தேக் ஏர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார். மேலும் உள்நாட்டு சுற்றுப்பயணத்தை அதிகரிக்க சிங்கப்பூரை முக்கிய தேர்வாக பாத்தேக் ஏர் கருதி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விரிவாக்கம் சுற்றுப்பயண மற்றும் வர்த்தக பகுதிகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.
இந்த ஒன்பது புதிய பயண வழிகளை காண சேவை மக்களுக்கு தடையற்ற பயணத்தை ஏற்படுத்தி தருவதை பிரதிபலிப்பாக அவர் சுட்டிக் காட்டினார்.
எதிர் வரும் 8 டிசம்பர் 2025 முதல்
சுபாங்-சிங்கப்பூர்
சுபாங்-ஜாக்கர்த்தா
சுபாங்-லங்காவி
சுபாங்-ஜொகூர் பாரு
பினாங்கு-சிங்கப்பூர்
பினாங்கு-கூச்சிங்
பினாங்கு-மேடான்
பினாங்கு-கோத்தா கினபாலு
ஈப்போ-சிங்கப்பூர் ஆகிய நகர்களுக்கு பாத்தேக் ஏர் சிறகடிக்கிறது.


