Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோலாலம்பூரிலிருந்து பஞ்சர்மசின் நகருக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவை!

கோலாலம்பூரிலிந்து இந்தோனேசியாவின் தென் களிமந்தானில் உள்ள மிகப்பெரிய நகரான பஞ்சர்மசினுக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவையை தொடங்குகிறது.
எதிர் வரும் 20 அக்டோபர் 2025 முதல் இந்த புதிய நகருக்கு ஏர் ஆசியா சிறகடிக்கிறது.
இந்த புதிய விமான சேவையை தொடர்ந்து மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கிடையே அந்நாட்டில் உள்ள பல்வேறு நகர்களுக்கு வாரத்திற்கு 229 விமான சேவைகளை உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா மேற்கொண்டு வருகிறது.
இந்த புதிய வழித் தடம் மூலம் செழிப்பான கலாச்சாரத்தை கொண்ட தென் களிமந்தானுக்கு மலேசியா மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் எளிதில் பயணிக்க முடியும்.
அற்புத இந்தோனேசியா 2025 பிரச்சாரத்திற்கு ஏற்ப இந்த புதிய விமான சேவை அமைந்துள்ளது.
இந்த புதிய விமான சேவை அப்பிராந்தியத்தில் சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்த துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை.


இப்புதிய விமான சேவையை தொடர்ந்து இந்தோனேசியாவில் 18 நகர்களுக்கு ஏர் ஆசியா சிறகடிக்கிறது.
தற்போது இந்தோனேசியாவில் ஜகார்த்தா,மேடான், யோக்யாகர்த்தா, பான்டா ஆச்சே, மாக்காசார், பாடாங், பெக்கான் பாரு,லோம்பொக்,லாபுவான் பொஜோ,பாலி உட்பட 18 நபர்களுக்கு ஏர் ஆசியா விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
கூச்சிங்கிலிந்து இந்தோனேசியாவின் போண்டியானக் மற்றும் பினாங்கிலிருந்து இந்தோனேசியாவின் ஜகார்த்தா, மேடான் நகர்களுக்கும் ஏர் ஆசியா விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே இந்தோனேசியாவில் விமான சேவையை மேற்கொண்டு வரும் மிகப்பெரிய விமான நிறுவனம் ஏர் ஆசியா என்று கூறிக் கொள்வதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக ஏர் ஆசியா மலேசியா விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular