Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

11ஆவது உலக அமைதி உச்சிநிலை மாநாடு கோலாகலமாக தொடங்குகிறது!

11 ஆவது உலக அமைதி உச்சிநிலை மாநாடு தென் கொரியாவின் தலைநகரான சியோலில் உள்ள சியோங்ஜூ நகரில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
உலக அமைதிக்காக தென் கொரியாவை மையமாக கொண்டு HWPL இயக்கம் ஆண்டுதோறும் நடத்தி வரும் இந்த மாநாடு செப்டம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.
உலகளவில் சுமார் ஆயிரம் பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
பல நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், சமய தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் உலக அமைதி குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் கல்விமான்கள் உரை நிகழ்த்துவர்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் HWPL இயக்கம் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அமைதி திட்டங்கள் மற்றும் சாதனைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களிடம் வேண்டும் முன்வைக்கப்படும்.


இதனை அடிப்படையாக கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டில் அமைதி மற்றும் போர்களை கை விடுதல் பிரகடனம் (DPCW) நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையிடம் கொண்டு சென்று ஒரு சட்டமாக முன்னெடுக்க HWPL இயக்கத்தின் தலைவர் Lee Man-hee அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இரண்டாம் உலகப் போர் ஒரு ராணுவ வீரரான இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த உச்சி நிலை மாநாட்டை நடத்தி வருகிறார்.


இந்த மாநாட்டில் மலேசியாவை பிரதிநிதித்து HWPL மலேசியாவின் கிளை நிர்வாகி நிங் போங், அதன் நிர்வாக உறுப்பினர்கள் ஃகெலி மிங்,அமெலியா இயோ,கிரிஸ்டின் வோங், நாடற்ற சிறார்களுக்கான கல்வி நிலையத்தின் நிறுவனர் மாரிலாவ் சின், அலை ஓசை ஊடகத்தின் தலைமை ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் ரத்தினம் மற்றும் ராக்ஸ்டார் மீடியா குளோபல் மற்றும் சங்கீத நாட்டிய குருகுலத்தின் நிறுவனர் ராகவி பவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular