
மலையாளிகளின் ஓணம் கொண்டாட்டத்தையோட்டி உலக மலையாளிகள் சம்மேளன சங்கம் பொன்னோணம் 2025 கொண்டாட்டத்தை வெகு சிறப்பாக நடத்த உள்ளது.
இந்த கொண்டாட்டம் எதிர் வரும் 28 செப்டம்பர் 2025 பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் காலை 9 மணி முதல் தொடங்கும் என உலக மலையாளிகள் சம்மேளன சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷர்மிளா நாயர் கூறினார்.
இந்த கொண்டாட்டத்தில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிறார்களுக்கு கசவு முதல் முதியவர்களுக்கு ஓணப்பாட்டு உட்பட பல பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மகாபலி தம்புரான் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரையும் மகிழச்செய்வார்.
இந்த கொண்டாட்டத்திற்காக கேரளாவிலிருந்து வருகை புரியும் இரு புகழ் பெற்ற பாடகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவர்.
கேரளா நடனங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் வாழை இலை உணவு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த கொண்டாட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள டிக்கெட் விற்பனையில் உள்ளது.
ஆகையால் தம்மை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வரும் படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்பு எண்:0123093941


