
ஒரு வலிமையான மற்றும் பரிவமிக்க நாட்டிற்கு ஒற்றுமையை அடித்தளம் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
பன்முகத்தன்மையில் நல்லிணக்க கொள்கையை ஒரு வழிகாட்டியாக கொண்டு தேசிய ஒற்றுமைக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சு செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நேற்று இங்கு பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் மெர்டேக்கா கலைக் கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து அவர் பேசினார்.
ஒவ்வொரு மலேசியரின் மனதில் ருக்குன் நெகராவின் மாண்புகள் இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்றார் அவர்.

கலை மற்றும் கலாச்சாரத்தின் வழி மக்களை ஒன்றிணைப்பதில் இந்த கண்காட்சி முக்கிய பங்காற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆற்றல் மிக்க உள்ளூர் கலைஞர்கள் இந்த கண்காட்சியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சி தருவதாக அவர் சொன்னார்.
இந்த கண்காட்சியை தொடக்கி வைக்க தம்மை அழைத்த பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் சுபா சீனிவாசனுக்கு தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார்.


