
மாடலிங் துறையில் நமது இந்திய பெண்மணிகள் பிரகாசிக்கலாம் என கூறுகிறார் ஒரு மாடல் அழகியான கிருஷ்ணவேணி விஜயகுமார்.
இந்த துறையில் முத்திரை பதிக்க மனவலிமை மற்றும் விடா முயற்சி மிகவும் அவசியம் என ஜொகூர் பாருவை சேர்ந்த அவர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் பல தடைகள் இருந்தாலும், அவற்றை தகர்த்தெறிந்து நாம் முன்னேறி செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.
‘சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்த நான் குடும்ப வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்நோக்கி வந்தேன். வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு நான் வந்தேன்’ என்றார் அவர்.
ஆனால் வாழ்க்கையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் முகநூலில் நான் வளம் வந்தேன்.

அப்பொழுது தான் ஆர் வி மாடலிங் உரிமையாளர் சகாதேவனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.
உடனே அவரிடம் தொடர்பு கொண்டு மாடலிங் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அவரிடம் கேட்டேன்.
கோவிட் 19 தாக்கத்தின் காரணமாக மாடலிங் வகுப்புகள் மூடப்பட்டுள்ளதால் இது குறித்து தாம் விரைவில் தம்மை தொடர்பு கொள்வதாக அவர் தெரிவித்தார்.
‘குடும்ப சூழ்நிலையின் காரணமாக அதிகமான மன அழுத்தத்தை நான் எதிர்நோக்கி கொண்டிருந்த காலம் அது’ என்றார் அவர்.
வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைக்கு தாம் வந்த அந்த காலக்கட்டத்தில்,…”எனது நிலைமையை கருத்தில் கொண்டு எனக்காக மாடலிங் வகுப்பை சகாதேவன் தொடங்கினார் என்று நினைத்துப் பார்க்கையில் நான் நெகிழ்ந்து போனேன்’ என்றார் அவர்.ஆர் வி மாடலிங் வகுப்பில் கற்றுக்கொண்ட அனுபவத்தை தொடர்ந்து முதல் படியாக 2023-ல் சிங்கப்பூரில் பியூட்டி வித்தின் நிறுவனம் நடத்திய சேலை அழகு ராணி போட்டியில் நான் பங்கு பெற்றேன்.
இந்த போட்டியில் நான் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றது மறக்க முடியாத அனுபவமாகும்.
அடுத்து 2023-ல் கோலாலம்பூரில் ஷொலிஸ்னி என்பவரின் டிவிஐபி மெனேஜ்மன் நடத்திய மிஸ் & மிஸஸ் தமிழச்சி அழகு ராணி போட்டியில் நான் கலந்து கொண்டேன்.

இந்தப் போட்டியிலும் இரண்டாம் நிலையில் நான் வெற்றி பெற்றேன் என்பதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு மிக மகிழ்ச்சி தருகிறது.
அடுத்து 2024-ல் சிங்கப்பூரில் உமாகாய்த்ரி என்பவரின் பியூட்டி வித்தின் நிறுவனம் நடத்திய ஆசியா கிளெமர் வேல்ட்வைட் 2024 அழகு ராணி போட்டியில் பங்கு பெற்று இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றது எனது சாதனை என்று தான் கூற வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 2025 சென்னையில் நடந்த மிஸ்டர் & மிஸஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் அழகு ராணி போட்டியில் நான் கலந்து கொண்டேன்.
மேலும் இம்மாதம் செப் 20 ஆம் தேதி கிள்ளானில் நடைபெறும் ஃபேஷன் இன் ப்ரேம் இன்டர்நேஷனல் 2025 அழகு ராணி போட்டியில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் பலரின் அறிமுகம் எனக்கு கிடைக்கிறது.
மாடலிங் துறையில் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற உற்சாகத்தில் நான் இருந்து வருகிறேன்.
மாடலிங் துறையில் எனது திறமைகளை பாராட்டி சிங்கப்பூரில் உள்ள பியூட்டி வித்தின் நிறுவன உரிமையாளர் உமாகாய்த்ரி எனக்கு சான்றிதழையும் வழங்கியுள்ளார்.
தொழில், குடும்பம் என்ற கடமைகள் இருந்த போதிலும் இந்த மாடலிங் துறையில் இன்னும் சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை எனது இலக்காகும்.
இதை தவிர்த்து ஆர் ஜே புரொடக்க்ஷன் தயாரித்து வரும் ஒரு தொடர் நாடகத்திலும் நான் நடித்து வருகிறேன்.
எனக்கு கல்வி தகுதி குறைவு தான். ஆனால் மாடலிங் துறையில் அது எனக்கு ஒரு தடையாக இல்லை.
மாடலிங் துறையும் ஒரு கலை தான். நமது இந்திய பெண்மணிகள் இந்த கலையை நன்கு கற்றுக் கொள்ளலாம் என கிருஷ்ணவேணி கூறுகிறார்.


