
கோலாலம்பூர் செப் 3
உலகளவில் 43 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயது கடந்த திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் இந்திய சமூகத்திற்கு பெருமையை சேர்க்கும் ஒரு நூல் என்றார் அவர்.
இன்று நாடாளுமன்ற நூலகத்தில் திருக்குறள் புத்தகம் மீதான உரை நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

திருக்குறளின் மாண்புகளுக்கு மகாத்மா காந்தி, ஜியார்ஜ் உக்லாப் போப் போன்ற பெருந் தலைவர்கள் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
திருக்குறள் உலகின் பொக்கிஷமாக கருதப்படுவதாக அவர் சொன்னார்.
நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய பட்ஜெட் தாக்குதலின் போது திருக்குறளை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டியதாக அவர் சுட்டிக் காட்டினார்.
1,330 திருக்குறள்களைக் கொண்ட இந்த புத்தகம் தேசிய ஒற்றுமைக்கு அடித்தளமாக இருக்கும் ருக்குன் நெகராவின் புத்துணர்விற்கு இணையாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசிய நாடாளுமன்ற நிர்வாக தலைவர் டத்தோ அமாட் ஹூஸாய்னியும் கலந்து கொண்டார்.


