
நாட்டின் 68 ஆவது தேசிய தினத்தை தனது பயணிகளுடன் பாத்தேக் ஏர் உற்சாகமாக கொண்டாடியது.
சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பாத்தேக் ஏர் விமானங்களில் உள்ள பயணிகளுக்கு சிறப்பு அன்பளிப்புகளை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சுபாங்கிலிருந்து மலேசியாவில் உள்ள இதர நகரங்களுக்கு புறப்பட்ட விமான பயணிகளுக்கு பாராட்டையும் கொண்டாட்டத்தையும் உணர்த்தும் வகையில் தேசியக் கொடிகள் மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட்டது.
தேசிய தின கொண்டாட்டத்தை பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பாத்தேக் ஏர் இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்தது.
இதனிடையே மலேசியர்கள் என்ற வகையில் நமது ஒன்றிணைந்த பயணத்தை தேசிய தினம் நினைவுறுத்துவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
நாம் நேசிக்கும் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் இணைப்பதில் பாத்தேக் ஏர் பெருமை கொள்வதாக அவர் சொன்னார்.

பயணிகளுக்கு தேசப்பற்றை நினைவுறுத்தவும் தேசிய தின கொண்டாட்டத்தை பகிர்ந்து கொள்ளவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த சிறப்பு தினத்தில் நாம் தேசிய தினத்தை கொண்டாடுவது மட்டுமின்றி, மக்களை மற்றும் பயணத்தை கொண்டாட வேண்டும். ஒரு மலேசியா என்ற குரல் ஓங்கி நிற்க வேண்டும் என அவர் சொன்னார்.
விமான பயணங்களுக்கு மேல் பாத்தேக் ஏரின் பங்களிப்பு இருக்கும் என்பதை இந்த முயற்சிகள் உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
தனது வழித்தடங்களை விரிவாக்கம் செய்வதோடு விமான பயணங்களில் அர்த்தமுள்ள அனுபவங்களை பயணிகளுக்கு பாத்தேக் ஏர் தொடர்ந்து வழங்கி வரும் என அவர் குறிப்பிட்டார்.

தனது அனைத்து விமான பயணத்திலும் மலேசியாவின் கலாச்சாரத்தை பாத்தேக் ஏர் தொடர்ந்து கொண்டாடி வரும் என்றார் அவர்.
பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவதே இந்த விமான நிறுவனத்தின் முன்னுரிமை என அவர் சுட்டிக் காட்டினார்.
இன்னும் புதிய நகரங்களுக்கு சிறகடிக்க பாத்தேக் ஏர் திட்டமிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேல்விவரங்களுக்கும் உங்களின் அடுத்த பயணத்தை திட்டமிடவும் www.batikair.com இணையத்தில் நீங்கள் வலம் வரலாம்.


