Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

11ஆவது உலக அமைதி உச்சிநிலை மாநாடு தென் கொரியாவின் சியோங்ஜூ நகரில் நடைபெறுகிறது!

11ஆவது உலக அமைதி உச்சிநிலை மாநாடு எதிர் வரும் 18-19 செப்டம்பர் 2025-ல் தென் கொரியாவில் உள்ள சியோங்ஜூ நகரில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறதது.
‘உலக அமைதிக்காக ஒன்று படுவோம்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த உச்சிநிலை மாநாட்டில் உலகளவிலிருந்து 20 தேசிய தலைவர்கள் மற்றும் 600 தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட HWPL அமைதி இயக்கம் இயக்கம் அதிபர்கள், பிரதமர்கள், தலைமை நீதிபதிகள், அரசாங்க அமைச்சர்கள் உள்ளடக்கிய 20 முக்கிய பிரமுகர்களை வரவேற்கிறது.
மேலும் இந்த உச்சி நிலை மாநாட்டில் கல்விமான்கள், சமய தலைவர்கள் மற்றும் ஊடகவியாளர்களும் கலந்து கொள்கின்றனர்.


இந்த மாநாட்டில் HWPL இயக்கத்தின் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அமைதி திட்டங்கள் மற்றும் சாதனைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு அடைத்துள்ளது சமூகத்திடம் முன்வைக்கப்படும்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட HWPL உலக உச்சிநிலை மாநாட்டின் நடவடிக்கைகளை அடித்தளமாக கொண்டு எதிர்வரும் உச்சிநிலை மாநாடு நடைபெறவிருக்கிறது.
இந்த முதல் உச்சிநிலை மாநாட்டில் போர்களை கைவிடுதல் மற்றும் உலக அமைதிக்கான அனைத்துலக சட்டத்தை உருவாக்குவது குறித்து அனைத்துலக தலைவர்கள் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டில் அமைதி மற்றும் போர்களை கைவிடுதல் (DPCW) பிரகடனம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் இந்த DPCW பிரகடனத்திற்கு ஆதரவு அதிகரித்து வந்ததை தொடர்ந்து, இந்த பிரகடனத்தை முன்னெடுக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


இந்த பிரகடனத்திற்கு அமெரிக்காவின் ஜியோர்ஜியா, மங்கோலியாவில் உள்ள பாயான்-ஒல்கி மற்றும் கொவட் மாநிலங்கள், மாலியில் உள்ள யோரொசோ நகரம், மாடாகாசாரில் உள்ள பெமாசொன்ரோ நகரம் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
DPCW கொள்கைகளுக்கு 23 நாடுகளின் அமைப்பு ஒன்றும் ஆதரவை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் HWPL இயக்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்வு கண்டுள்ளது. இந்த எண்ணிக்கையின் உயர்வுக்கு HWPL இயக்கத்தின் தலைவர் Man Hee Lee அவர்களின் தூர நோக்கு சிந்தனையே காரணமாகும்.
‘அமைதிக்கு நாம் அந்நியர்கள் அல்ல’ இவ்வாண்டு மார்ச் மாதத்தில் நடந்த 9 ஆவது DPCW நிறைவு விழாவில் Man Hee Lee முழக்கமிட்டிருந்தார்.
சியோங்ஜூ நகரில் நடைபெறும் உச்சிநிலை மா நாட்டுடன், உலகளவில் 60 நாடுகளில் கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த கொண்டாட்டங்களில் 13,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு 11 ஆவது உலக அமைதி உச்சிநிலை மாநாட்டை மலேசியா எதிர் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி சரவாக்,கூச்சிங் நகரில் கொண்டாடுகிறது.
HWPL மலேசியா ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைகின்றனர்.
அடுத்த ஆண்டு அமைதி நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்போம் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இது தொடர்பான மேல் தகவல்களுக்கு
hwplmalaysia@gmail.com தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular