Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜப்பானின் ஒசாகா நகருக்கு பாத்தேக் ஏர் மீண்டும் சிறகடிக்கிறது

சுபாங் ஆக 27
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானின் ஒசாகா நகருக்கு முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் சிறகடிக்கவிருக்கிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஒசாகாவின் கன்சாய் அனைத்துலக விமான நிலையத்திற்கான இந்த நேரடி விமான சேவை எதிர்வரும் 15 டிசம்பர் 2025-ல் தொடங்குகிறது.
கடந்த 7 டிசம்பர் 2024-ல் தைப்பே வழி கோலாலம்பூர்-ஒசாகா விமான சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த புதிய நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.
இந்த புதிய நேரடி விமான சேவைக்கு பரந்த உடலமைப்பை கொண்ட ஏர்பஸ் A330 ரக விமானத்தை பாத்தேக் ஏர் பயன்படுத்துகிறது.


ஜப்பானின் கலாச்சார மற்ற சமையல் வகைகள் சிறப்புகளைக் கொண்ட நகரான ஒசாகாவிற்கு சிறகடிக்கவிருக்கும் இந்த விமானத்தில் பயணிகள் சொகுசாக அமர்ந்து செல்ல 12 பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகள் மற்றும் 365 எக்கொனொமி இருக்கைகள் உள்ளன.
பாத்தேக் ஏர் நெட்வொர்க்கில் ஒசாகா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விமான சேவை என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
ஒசாகா நகருக்கு மீண்டும் சிறகடிக்க கிடைக்கப்பட்டு இந்த வாய்ப்பை தாங்கள் மிகவும் வரவேற்பதாக அவர் சொன்னார்.


பெரும்பாலான மலேசியர்களுக்கு ஜப்பான் ஒரு கனவு நகரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஒசாகா ஒரு தனித்துவ அம்சத்தையும் வளமான வரலாற்றையும் கொண்டுள்ள நகரம் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நகரம் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் அசாதாரணமான உணவு வகைகளுக்கு சொந்தம் கொண்டது.
A330 ரக விமானத்தின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை இரண்டு முக்கிய நகர்களின் பயணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர்.
நடப்பில் உள்ள தினசரி கோலாலம்பூர்-தோக்கியோ(நரித்தா) விமான சேவையோடு ஒசாகாவிற்கு சிறகடிக்கவும் மற்றும் தோக்கியோவிலிந்து திரும்பவும் இந்த புதிய சேவை ஏதுவாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பெரிய A330 பிறகு விமானம் அறிமுகத்தின் மூலம் அதிகமான பயணிகள் வரும் ஆண்டுகளில் பயணிக்க ஆர்வம் கொள்வர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜப்பானின் மூன்றாவது பெரிய நகரான ஒசாகா ஜப்பானின் ‘சமையல் அறை’ என பெரும்பாலும் கூறப்பட்டு வருகிறது.


இந்த நகரில் ஜப்பானின் அறுசுவை உணவு வகைகள் பரவலாக கிடைக்கும். உணவு பிரியர்களுக்கு ஒசாகா ஒரு அற்புதமான தேர்வு நகரமாகும்.
பூங்காக்கள், கடைகள் மற்றும் இயற்கை அழகை கொண்ட இந்த நகரம் சுற்றுப்பயணிகளில் அதிகம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
மீண்டும் கோலாலம்பூர்-ஒசாகா நேரடி விமான சேவை வட ஆசியாவில் பாத்தேக் ஏரின் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
வாரத்திற்கு 3 மூன்று முறை மேற்கொள்ளப்படும் இந்த விமான சேவையின் கோலாலம்பூர்-ஒசாகா நகருக்கான ஒரு வழி பயண கட்டணம் வெ 599(எக்கொனொமி) தொடங்குகிறது.
கூடுதல் தகவல்களுக்கு www.batikair.com அகபாக்கத்தில் வலம் வரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular