
ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெறும் 12 வது குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு இந்திய தமிழக அரசு மற்றும் NSW மாநில அரசு ஆதரவுடன் 2025 டிசம்பர் 6 அண்ட் 7 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் மலேசிய சிறு குறுந் தொழில் செய்வோர் மற்றும் மலேசிய இந்திய வர்த்தக சம்மேலனும் பினாங்கு இந்திய வர்த்தக சங்கம் மற்றும் துறை சார்ந்த 17 வர்த்தக அமைப்புகள் தொழிலதிபர்கள், பேராளர்கள் தொழில் வாய்ப்புகளை தேடுவோர், கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இம்மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட வர்த்தக அமைப்புகள், இந்தியா தமிழ்நாடு மலேசிய அரசுகளின் சலுகை பெற்று அரங்கம் அமைக்கவும், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தவும், பன்னாட்டு வர்த்தக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ஏற்றுமதி இறக்குமதி செய்யவும் மாநாடு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பல்வேறு வர்த்தக அமைப்புகள் Business Meetம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு பார்வையாளராக கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். தொடர்புக்கு +6016167708


