
நெகிரி செம்பிலான் உள்ள பகாவ் குடியிருப்புப் பகுதி மக்களுக்காக நடத்தப்பட விருந்த விளையாட்டு போட்டிக்கு சம்பந்தப்பட்ட நகரான் கழகம் வழங்கிய அனுமதி நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் பெரிக்காத்தான் கட்சியின விளையாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்குவதால் அந்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் பெர்சத்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
போட்டியின் ஏற்பாடுகள் தமது உருவப் பதாகைகளை வெளியிட்டதால் ஜெம்போல் நகரண்மை கழகம் பொது விளையாட்டு பூங்காவை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக ஏற்பாட்டு குழுவின் தலைவர் அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலமாக தமக்கு தெரிவித்ததாக அவர் கூறினார்.
குடியிருப்புப் பகுதியில் இருக்கும் பொது பூங்காக்களை தேவையான செயல் திட்டங்களுக்காக பயன்படுத்துவதில் நகரான்மை கழகத்திற்கு என்ன தான் சிக்கல் என அவர் கேள்வி எழுப்பினார்.
சம்பந்தப்பட்ட நகரான்மை கழகம் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட கட்சிகளுக்கு எதிர்ப்பாக செயல்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொது மக்களுக்கான செயல்திட்டங்கள் அரசியல் பேதம் இன்றி அனைவருக்குமாக இருக்க வேண்டும் என்பதை மடானி அரசு உணர வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
பொதுமக்களின் திட்டங்களுக்கு அரசியல் பாகுபாடு இருக்கக்கூடாது.
எதிர்க்கட்சிகள் மக்களின் நலன்களுக்காக இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் இதுபோன்று விவகாரங்களில் நடப்பு அரசாங்கம் விவேகமாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் திட்டங்களில் பொதுமக்கள் பங்கு பெறுவதை நடப்ப அரசாங்கம் தடுக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.


