
கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ‘தூருன் அன்வார்’ பேரணி வெறுப்பை விதைக்க அல்ல, மாறாக இது அன்வாரின் தோல்விக்கான ஒரு எச்சரிக்கை என பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர் நா. பாலசுப்பிரமணியம் கூறினார்.
ஆகையால் தமக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள இந்த பேரணி விதைக்கும் நோக்கில் தான் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது தவறான கூற்று என்றார் அவர் .
மாறாக பொருளாதாரம், சமூக நீதி, நிறைவேற்றாத சீர்திருத்த வாக்குறுதிகள் போன்றவற்றில் பிரதமர் தோல்வி கண்டுள்ளதால் இந்த பேரணி நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இது நடப்பில் உள்ள ஆட்சியில் ஆணவப் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பேரணி அமைந்ததாக அவர் சொன்னார்.
அன்வார் தலைமைத்துவத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த பேரணியில் தங்களின் அதிர்ப்பையை முன் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடப்பு அரசாங்கம் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. இந்த அரசாங்கம் தன் முன்பாக செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்து வரும் பொய்யான வாக்குறுதிகளை இந்நாட்டு மக்கள் இனியும் நம்ப தயாராக இல்லை என அவர் தெரிவித்தார்.
பேரணி நடத்துவது ஜனநாயக உரிமையாகும், இது வெறுப்பை வெளிப்படுத்த அல்ல என்பதை இந்த அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.


