
கடந்த சில தினங்களுக்கு முன்பு மடானி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்திய தூருன் அன்வார் பேரணி அரசாங்கத்திற்கு ஒரு நினைவுறுத்தல் தானே தவிர, அது ஒரு மிரட்டல் அல்ல என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
தூருன் மலேசியா பேரணி பெரும் கூட்டத்தை திரட்டாவிட்டாலும், அந்தப் பேரணியில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் மிகத் தெளிவாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தப் பேரணியில் குறிப்பாக அதிகமான இந்தியர்கள் கலந்து கொள்ளவில்லை காரணம் அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகளில் இவர்களுக்கு சலிப்பு தட்டி விட்டதாக அவர் சொன்னார்.
தாம் உட்பட பெரும்பாலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய சமூகத்தை பாதிக்கும் விவகாரர்கள் குறித்து மக்களவையில் பலமுறை கேள்வி எழுப்பி வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியர்கள் இது நோக்கம் பிரச்சனைகள் குறித்து பல வேலைகளில் பிரதமரிடம் தாங்கள் கேள்வி எழுப்பி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்திடமிருந்து திருப்திகரமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் தாங்கள் எதுவும் செய்யவில்லை என இந்திய சமூகத்தினர் தங்களை குற்றம் சாட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மக்களின் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு செவி சாய்க்கும் தலைமைத்துவம் தான் இந்திய சமூகத்திற்கு தேவைப்படுகிறது.
ஆகையால் இந்திய சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு இந்த நடப்பு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகையால் அதிருப்திகளை வெளிப்படுத்துவதில் நாம் ஒருபோதும் அச்சம் கொள்ளக்கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
இது ஜனநாயகத்திற்கு ஒரு மிரட்டல் அல்ல. அரசாங்கத்திற்கு இது நினைவுறுத்தல் தான் என அவர் குறிப்பிட்டார்.


