Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசிய காலை உணவிற்கான புதிய உணவு பட்டியலை சாந்தான் அறிமுகப்படுத்துகிறது!

மெர்டேக்கா மாதத்திற்கான சரியான நேரத்தில் கேப்பிட்டல் ஏ-யின் கீழ் செயல்படும் உணவு மற்றும் குளிர்பானங்கள் பிராண்டான சாந்தான், மலேசிய காலை உணவுக்கான புதிய உணவு பட்டியலை அறிமுகம் செய்தது.
சாந்தான் தலைமை செயல்முறை அதிகாரி கேத்தரின் கோ ஏர் ஆசியா விமானத்தில் இந்த புதிய உணவு பட்டியலை அறிமுகம் செய்தார்.
சாந்தானின் அண்மையில் படைப்புக்களில் விமானத்தில் முதன் முதலில் வழங்கப்படும் காயாக பட்டர் தேங்காய் டோஸ்ட், பிரபல பாக் நாசீர் நாசி லெம்மாக் லைட்(நாசி லெம்மாக் புங்குஸ்), ஜீரோ தே தாரிக் காவ் காவ் மற்றும் மலேசியா மற்றும் ஆசியான் பிராந்தியத்தில் பிரபலமான ஒரு பானமான அசாம் போய் பானத்தை அறிமுகம் செய்வதில் சாந்தான் பெருமை கொள்கிறது.

புதிய உணவு பட்டியலில்
சிறப்பம்சங்கள்:

  • காயா வெண்ணெய் தேங்காய் டோஸ்ட்
    தேங்காய் பால் கலந்த ரொட்டி, பாண்டான் காயா மற்றும் பிரீமியம் உப்பு வெண்ணெய்
    காம்போ விலை: ஏர் ஆசியாவில் (AK) RM 12/ ஏர் ஆசியா x (D7) இல் RM 17
  • பாக் நாசீரின் நாசி லெம்மாக் லைட் (நாசி லெம்மாக் புங்குஸ்)
    வாழை இலையில் சுற்றப்பட்ட சிக்னேச்சர் உணவின் சிறிய பதிப்பு RM12(காம்போ)-ஏர் ஆசியா விமானங்களில் மட்டுமே கிடைக்கும்
  • Zero Teh Tarik Kaw Kaw
    பூஜ்ஜிய கலேரி சர்க்கரையுடன் தயாரிக்கப்பட்டது. செழுமையான சுவையைத் தக்க வைத்துக் கொண்டு மலேசியர்கள் ஏர் ஆசியாவில் (AK) RM9(Ala carte) ஐ Air Asia x (D7) இல் இதன் விலை RM10 ஆகும்.
    அனுபவத்தை நிறைவு செய்ய, சாந்தான் காம்போ உணவை வாங்கும் பயணிகள் வெறும் RM3க்கு ‘ஸ்னெக் பாக்ஸ் கிட்டாவை’ சேர்த்துக் கொள்ளலாம். மூன்று வகையான பிரியமான உள்ளூர் சிற்றுண்டிகள்: வறுக்கப்பட்ட தேங்காய் பிஸ்கட், முறுக்கு மற்றும் அன்னாசி பச்சடி. இது மற்றொரு தனித்துவமான உணவு வகையாகும். இது நமது குழந்தை பருவத்தில் சுவைகளை வானத்திற்கு கொண்டு வருகிறது.
    எதிர்வரும் மெர்டேக்கா மாதத்தை கொண்டாடும் வகையில் இந்த புதிய உணவு பட்டியல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கேத்தரின் கோ கூறினார்.
    இந்த புதிய உணவு பட்டியல் நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையை சித்தரிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
    சிற்றுண்டி பிரிவில் பிரகாசமான வாய்ப்பை தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
    இந்த புதிய அறிமுகத்தின் மூலம் இந்த ஆண்டில் எங்கள் ஒட்டுமொத்த விற்பனையில் 10 விழுக்காடு பங்களிப்பை தாங்கள் இலக்காக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
    மலேசியர்கள் தங்களின் விருப்பமான உணவை அன்றாடம் தரையிலும் விமான பயணத்திலும் ருசிக்க முடியும் என்றார் அவர்.
    அனைத்து Air Asia மற்றும் Air Asia x இந்த புதிய உணவு பட்டியல் பயணிகளுக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular