Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்து சமூகத்திற்கு வெற்று வாக்குறுதிகள் தேவையில்லை -நூருலுக்கு சஞ்சீவன் வலியுறுத்து

இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு விற்று வாக்குறுதிகள் தேவையில்லை… நடவடிக்கைகள் தான் அவசியம் என பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வாருக்கு பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் ஆலோசனை கூறினார்.
இந்திய சமுதாயத்தில் இன்னும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகள் தேங்கி கிடப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையில், இந்திய சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


ஜூலை மாதம் வந்துவிட்ட போதிலும் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மித்ரா மானியம் இன்னும் முறையாக விநியோகித்த பாடில்லை என அவர் சாடினார்.
அடிப்படை வசதிகள் இல்லாத தமிழ் பள்ளிகள் நாட்டில் இன்னும் அதிகமாக உள்ளது. இந்திய சமூகம் இன்னும் வறுமைக்கோட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர் என்பதை மடானி அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்தி சமூகத்தில் வேலை வாய்ப்பு, உயர் கல்வி நிலைய வாய்ப்பு, கோயில் நிலப் பிரச்சனைகள், இடுகாடு உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமைதியாக பணிபுரியும் யூகத்தின் ரகசியம் என்ன என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்கம் தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்திற்கு உதவ வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட தலைவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும்.
இந்திய சமூகத்திற்கான திட்டங்கள் என்ன என்பதை விளக்கம் தர வேண்டும் என சஞ்சீவன் குறிப்பிட்டார்.
இந்தியர்களுக்கு சேவையாற்றுவதில் அமைதியான அணுகுமுறையே தமக்கு வசதியானது என முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருலின் அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular