Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஊடகப் பணிமனை மற்றும் நெட்வொர்க் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது!

அண்மையில் ஜொகூர் பாருவில் ஊடக பணிமனை மற்றும் நெட்வொர்க் கருத்தரங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.
ராக்ஸ் ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த 24,25 ஜூன் 2025 தேதிகளில் ஜொகூர் பாரு Berjaya Waterfront ஹோட்டலில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் நாடு தழுவிய நிலையில் 14 ஊடக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் கவிமாறன், ஊடகத்தின் பங்கு, பலன்கள் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து ஆழமான கருத்துக்களை வலியுறுத்தி கலந்து கொண்ட அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
மலேசிய கலை மற்றும் ஊடக சமூகத்தின் சார்பாக இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊடகப் பிரதிநிதிகள், தொழில் முனைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு அவர் நன்றி கூறினார்.
இதனிடையே நாடு தழுவிய நிலையில் இது போன்ற கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என ராக்ஸ் ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராகவி பவனேஸ்வரி வலியுறுத்தினார்.


இந்திய சமூகத்திற்கு அவ்வப்போது நாட்டில் நடைபெறும் தகவல்களை எடுத்துச் சொல்வதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்கள் சரியான தகவல்களை கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.
இந்த கருத்தரங்கில் மலேசியாவிலிருந்து கலந்துகொண்ட ஊடக பிரதிநிதிகளுக்கு அவர் நன்றி கூறினார்.
இந்த கருத்தரங்கில் டத்தோ, டத்தின் ராஜசேகரன் வசந்தி, டத்தோ புருஷோத்மன், டாக்டர் ஆனந்த், சிங்கப்பூரைச் சேர்ந்த ராபர்ட், மலேசிய கலை உலக நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular