
இங்குள்ள இயல் இசை கலை இயக்கத்திற்கு தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நன்கொடை வழங்கினார்.
அரசு தலைமையிலான இந்த இயல் இசை கலை இயக்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சிக்கு தாம் ஆதரவு வழங்குவதாக சரஸ்வதி கூறினார்.
இந்திய சமூகத்தின் பாரம்பர கலையான இயல் இசை நாடகம் போற்றி காக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நமது வரும் கால சந்ததியினர் இந்திய சமூகத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை மறந்து விடக்கூடாது என்றார் அவர்.
நமது கலை மற்றும் கலாச்சாரங்களை வளர்ப்பதில் இது போன்ற இயக்கங்கள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
தமது இந்த நன்கொடை இந்த இயக்கத்தின் பணிகளுக்கு உதவும் என அவர் சொன்னார்.


