
உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5) மற்றும் உலக பெருங்கடல் தினம்
( ஜூன் 8) ஆகிய கொண்டாட்டங்களை முன்னிட்டு அனைத்துலக சமாதான இளைஞர் குழு (IPYG) மற்றும் உலக சமாதான இயக்கத்தின் மலேசிய கிளை HWPL Malaysia ஒன்றிணைந்து கூச்சிங்கில் உள்ள பாசீர் பாஞ்ஜாங்(Long Beach) கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டன.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த இரு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
கடல் உயிரினங்கள் பாதுகாக்கப்படவும் சுற்றுச்சூழல் சீர் கெடாமல் இருக்கவும் இந்த இரு நாட்கள் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக இயற்கை மீது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் HWPL மற்றும் IPYG இந்த சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் இந்த தொண்டூழிய இளைஞர் குழு இந்நடவடிக்கையில் ஈடுபட்டது.

சுமார் 20 பேர் கொண்ட இந்த குழுவினர் கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் போட்டல்கள், பிளாஸ்டிக் பைகள், காகிதங்கள் மற்றும் இதர தேவையற்ற பொருட்களை சேகரித்து கடற்கரையை சுத்தப்படுத்தினர்.
சுத்தமான இடம் மக்களுக்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் சந்தோஷத்தை தரும் என HWPL Malaysia இயக்கத்தின் தலைவர் நிங் கூறினார்.
நாம் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதால் நமது சமூகத்தின் நலனுக்காக நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்… இது அமைதியின் ஒரு பகுதி என்றார் அவர்.
சுற்றுச்சூழல் விவகாரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த HWPL Malaysia மற்றும் IPYG இது போன்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மக்களுடன் ஒன்றிணைந்து இது போன்ற விவகாரங்களில் ஈடுபட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றார் அவர்.
இது போன்ற திட்டங்களில் ஈடுபட விரும்புபவர்கள் hwplmalaysia@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்


