
அருங்காட்சியகத்தில் மாணவர்கள் எவ்வித அழுத்தமுமின்றி கற்றுக் கொள்ள முடியும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
அருங்காட்சியகத்திற்கு வருகை புரிபவர்கள் உண்மைகளை மட்டும் தெரிந்து கொள்வது மட்டுமின்றி, ஆதாரங்களையும் கண்கூடாக பார்க்க முடியும் என அவர் சொன்னார்.
ஆகையால் குறிப்பாக பள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்தில் அதிகமாக கற்றுக் கொள்ள முடியும் என அவர் சொன்னார்.
இன்று இங்குள்ள தைப்பிங் அருங்காட்சியகத்தில் 2015 ஒற்றுமை கண்காட்சி தொடக்கி வைத்து அவர் பேசினார்.
அருங்காட்சியகம் கல்வி நிலையங்கள், அரசு சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் இதர அமைப்புகளுடன் ஒற்றுமை புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சமூகத்தின் அன்றாட வாழ்க்கையில் அருங்காட்சியகம் ஒரு முக்கிய பங்காற்ற வேண்டும் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற கண்காட்சி ஒற்றுமை கலாச்சாரத்தை ஏற்படுத்துவதோடு சமூகத்தில் புரிந்துணர்வை வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நிலைத்தன்மைக்கு இது மிகவும் அவசியம் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய அருங்காட்சியாக இலாகாவின் தலைமையை இயக்குனர் டத்தோ கமருல் பஹாரின் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.


