Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

CAAM மற்றும் MAVCOM இணைப்பு நாட்டின் விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்தும்!

CAAM மற்றும் MAVCOM இணைப்பு நாட்டின் விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் என ஏர் ஆசியா நம்பிக்கை தெரிவித்தது.
மலேசியாவின் விமான போக்குவரத்து துறையின் வழக்கமான கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்று என ஏர் ஆசியா கூறியது.
இந்த ஒருங்கிணைப்பு பயனீட்டாளர் பாதுகாப்பு, பொருளாதார நடைமுறை மற்றும் இதர நடைமுறைகளுக்கு மிக அவசியமாகும்.
இதனிடையே ஒரு ஒற்றை விமான போக்குவரத்து வழக்க நடைமுறையின் உத்தேசத்தை ஏர் ஆசியா வரவேற்பதாக ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
அரசாங்கத்தின் இந்த முடிவு விமான போக்குவரத்து துறையை சேர்ந்தவர்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டியை தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த புதிய நடைமுறையின் வழி இறுதியில் விமான பயணிகள் நிச்சயம் பயனடைவர் என அவர் சுட்டிக் காட்டினார்.
அனைத்துலக தொடர்புகளை மேலும் வலுப்படுத்த CAAM வழி அரசாங்கத்துடன் ஒத்துழைக்க ஏர் ஆசியா தயார் நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான மையத்திலிருந்து ஏர் ஆசியா தொடர்ந்து தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இங்கிருந்து ஏர் ஆசியா மலேசியா தினசரி 500 விமான சேவைகளை மேற்கொள்வதோடு, 75,000 பயணிகளை தினமும் கொண்டு செல்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆசியானில் நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனம் என்ற நிலையில், மலேசியாவின் விமான போக்குவரத்து இலக்கை அடைய ஏர் ஆசியா முழுமையான ஆதரவை வழங்கி வரும் என அவர் சுட்டிக் காட்டினார்.
தனது பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் ஏர் ஆசியா எப்பொழுதுமே முன்னுரிமை வழங்கி வரும் என அவர் சொன்னார்.
தனது பயணிகளுக்கு மலிவு கட்டண மற்றும் தரமான சேவையை வழங்குவதே எங்களின் இலக்கு ஏன் அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular