
பெமாஸ்சுவான்ரோ நகரில் நடைபெற்ற வரலாற்றுப் பூர்வ மதங்களுக்கு இடையிலான அமைதி கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மடகாஸ்கர் நாட்டின் 65 ஆவது சுதந்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு உலக சமாதான இயக்கமான HWPL மற்றும் UMMI Madagascar இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது.
பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.
நம்பிக்கை, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் பௌத மதங்களைச் சேர்ந்த ஆர்வலர்கள் புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கும் நோக்கில் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அனைவரும் ஒற்றுமை மற்றும் அன்புடன் பரஸ்பர உறவை வளர்க்க வேண்டும் என இஸ்லாமிய நம்பிக்கை வலியுறுத்துவதாக UMMI Madagascar பிரதிநிதி ஷெக் ஜாமில் கூறினார்.
இஸ்லாமில் பாகுபாடு மற்றும் இனவாதத்திற்கு இடமில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் காரணமாக தான் இந்த அமைதி கொண்டாட்டத்தில் தாம் கலந்து கொண்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த கொண்டாட்டம் சமூகத்தில் ஒரு அற்புதமான தகவலை பரப்புவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு ஜீவனும் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அமைதி நமக்கு மனநிம்மதியை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்துரையாடல் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மத தலைவர்கள் அமைதியின் அவசியம் குறித்து தங்களின் உரைகளில் வலியுறுத்தினர்.
புரிந்துணர்வு, ஒற்றுமையின் அவசியம் மட்டும் சகிப்புத்தன்மையின் அவசியம் குறித்தும் இந்த உரைகளில் வலியுறுத்தப்பட்டது.
மடகாஸ்கர் நாட்டின் கலாச்சார அம்சங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒற்றுமையின் அவசியம் என்ன என்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.
உள்ளூர் பாடகர்கள் அற்புதமாக தங்களின் படைப்புகளை வழங்கி அனைவரையும் மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதி அம்சமாக பங்காளித்துவ அமைப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த கொண்டாட்டம் மிக அர்த்தமுள்ள ஒரு கொண்டாட்டமாக அமைந்ததாக HWPL பிரதிநிதி ஒருவர் கூறினார்.
உலகளவில் அமைதியை நிலைநிறுத்த இதுபோன்ற கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.


