
இளைஞர்களின் குரலுக்கு குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் எழுப்பி வரும் ஆட்சேபத்திற்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும் என பாஸ் ஆதரவு பேரவையின் தேசி தலைவர் நா. பாலசுப்ரமணியம் வலியுறுத்தினார்.
சபா மலேசியா பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் நடத்திய
சபா 2.0 ஊழலை ஒழியுங்கள் ஆட்சேப பேரணி குறித்து அவர் கருத்துரைத்தார்.
இந்த ஆட்சேப பேரணியில் பிரதமரின் கேலிச்சித்திரம் எரியூட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டதாரி மாணவர்கள் ஏற்பாடு செய்த இந்த ஆட்சிபை பேரணி பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுப்பப்பட்டு வருகிறது.
பிரதமரின் கேலிச்சித்திரம் ஏரியூட்ட சம்பவத்தை பல தரப்பினர் கண்டித்து வருகின்றனர்.
இருப்பினும் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களின் குரல் நாட்டின் நாடித் துடிப்பு என அவர் சுட்டிக் காட்டினார்.
இன்றைய இளைஞர்கள் தான் நாட்டின் அடுத்த தலைவர்கள் என்பதை அரசாங்கம் மறந்து விடக்கூடாது என அவர் சொன்னார்.
குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் ஆட்சி குரலை இந்த அரசாங்கம் அலட்சியப்படுத்தக் கூடாது என அவர் சுட்டிக் காட்டினார்.
சபாவில் ஊழல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தான் அந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சி செய்த பேரணியை நடத்தியுள்ளனர் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சேப பேரணியை நடத்துவதால் இவர்கள் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் என்று அர்த்தமல்ல.
நாட்டில் நடக்கும் தவறுகளை கண்டறிந்து அவற்றை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே இவர்களின் பிரதான நோக்கமாகும்.
ஆகையால் குறிப்பாக சபாவில் தலை தூக்கி வரும் ஊழல் சம்பவங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என அவர் சொன்னார்.
உண்மைக்காக குரல் எழுப்பும் எந்தவொரு தரப்பினருக்கும் பாஸ் ஆதரவு பேரவை துணை நிற்கும் என பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.


