Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

11 ஆவது அனைத்துலக யோகா தின கொண்டாட்டம்!

11 ஆவது அனைத்துலக யோகா தின கொண்டாட்டம் இங்குள்ள பத்துமலை வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது.
இங்குள்ள இந்திய தூதரகம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் மற்றும் இதர பங்காளி இயக்கங்கள் ஒத்துழைப்புடன் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் நகுலேந்திரன் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
யோகவை சட்டரீதியல் ஒரு விளையாட்டு அங்கமாக மலேசிய அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக அவர் தமதுரையில் கூறினார்.


யோகாவை பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர நிலைகளில் அறிமுகப்படுத்தி வருவதில் இந்திய தூதரகம் மற்றும் இந்திய கலாச்சார மையம் ஆகிய தரப்பினர் பங்கை தம் வரவேற்பதாக அவர் சொன்னார்.
யோகா உடல் நலத்திற்கு மட்டுமின்றி மன நலத்திற்கும் ஆரோக்கியத்தை தருவதாக அவர் சொன்னார்.
இதனிடையே இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் 1200 யோகா ஆர்வலர்களுக்கு மலேசியாவிற்கான இந்திய தேசிய பிஎன் ரெட்டி பாராட்டுகளை தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகளின் சபை யோகா தின கொண்டாட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியது சோர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி அனைத்துலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த யோகா தினம் கொண்டாட்டத்தில் தூதர்கள் அதிகாரி, பணியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், பல்கலைக்கழக மற்றும் பள்ளி மாணவர்கள், அரசாங்க சார்பற்ற பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த யோகா தின கொண்டாட்டத்தை நேதாஜி சுபாஷ் சந்திர கலாச்சார மையத்தின் யோகா ஆசிரியர் சான்டிப் வான்டே வழி நடத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular